Kural 423
குறள் 423
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
yepporul yaaryaarvaaik kaetpinum apporul
maeipporul kaanpa tharivu
Shuddhananda Bharati
To grasp the Truth from everywhere
From everyone is wisdom fair.
GU Pope
Though things diverse from divers sages' lips we learn,
'Tis wisdom's part in each the true thing to discern.
To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom.
Mu. Varadarajan
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.
Parimelalagar
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.
விளக்கம்:
(குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர் வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்தி நின்றது. மெய்யாதல்: நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது; அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும், அப் பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது,
(என்றவாறு). இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்ட வற்றிற் றெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.