குறள் 362

அவாவறுத்தல்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

vaendungkaal vaendum piravaamai matrrathu
vaentaamai vaenda varum


Shuddhananda Bharati

Curbing of desire

If long thou must, long for non-birth
It comes by longing no more for earth.


GU Pope

The Extirpation of Desire

If desire you feel, freedom from changing birth require!
'I' will come, if you desire to 'scape, set free from all desire.

If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be
attained by desiring to be without desire.


Mu. Varadarajan

ஒருவன்‌ ஒன்றை விரும்புவதானால்‌, பிறவா நிலைமையை விரும்பவேண்டும்‌; அது, அவா அற்ற நிலையை விரும்பினால்‌ உண்டாகும்‌.


Parimelalagar

வேண்டுங்கால் பிறவாமை வேண்டும் -பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும்; அது வேண்டாமை வேண்ட வரும் - அப்பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம்.
விளக்கம்:
(அநாதியாகத் தான் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலின், 'பிறவாமையை வேண்டும்' என்றும், ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒரு பொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின், 'அது வேண்டாமை வேண்ட வரும்' என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறி, பின் அது வரும்வழி கூறத் தொடங்குகின்றமையின், 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.)


Manakkudavar

(இதன் பொருள்) வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்; அப் பிற வாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும்,
(என்றவாறு). இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.