குறள் 274

கூடாவொழுக்கம்

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

thavamaraindhthu allavai seithal puthalmaraindhthu
vaetduvan puchimilth thatrru


Shuddhananda Bharati

Imposture

Sinning in saintly show is like
Fowlers in ambush birds to strike.


GU Pope

Inconsistent Conduct

'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks.
When, clad in stern ascetic garb, one secret evil works.

He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds.


Mu. Varadarajan

தவக்கோலத்தில்‌ மறைந்துகொண்டு தவம்‌ அல்லாத தீய செயல்களைச்‌ செய்தல்‌, புதரில்‌ மறைந்து வேடன்‌ பறவைகளை வலைவிசிப்‌ பிடித்தலைப்‌ போன்றது.


Parimelalagar

தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல்; வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிரித்தாற் போலும்.
விளக்கம்:
('தவம் ஆகுபெயர், தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல் . இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) தவத்திலே பிறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல், வேட்டு வன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும்,
(என்றவாறு). அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.