குறள் 1282

புணர்ச்சிவிதும்பல்

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்

thinaiththunaiyum ootaamai vaendum panaiththunaiyum
kaamam niraiya varin


Shuddhananda Bharati

Longing for reunion

When passion grows palmyra-tall
Sulking is wrong though millet-small.


GU Pope

Desire for Reunion

When as palmyra tall, fulness of perfect love we gain,
Distrust can find no place small as the millet grain.

If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (tofeign) dislike even as much as the millet.


Mu. Varadarajan

காமம்‌ பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச்‌ சிறிதேனும்‌ ஊடல்‌ கொள்ளாமல்‌ இருக்க வேண்டும்‌.


Parimelalagar

இதுவும் அது. காமம் பனைத்துணையும் நிறைய வரின். மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமையின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும்.
விளக்கம்:
('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்; பனையள் வினும் மிக காமநுகர்ச்சி வருமாயின்,
(என்றவாறு). இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது.