குறள் 1046

நல்குரவு

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்

natrporul nankunarndhthu sollinum nalkoorndhthaar
sotrporul chorvu padum


Shuddhananda Bharati

Poverty

The poor men's words are thrown away
Though from heart good things they say.


GU Pope

Poverty

Though deepest sense, well understood, the poor man's words convey,
Their sense from memory of mankind will fade away.

The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.


Mu. Varadarajan

நல்ல நூற்‌ பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச்‌ சொன்ன போதிலும்‌ வறியவர்‌ சொன்ன சொற்பொருள்‌ கேட்பார்‌ இல்லாமல்‌ பயன்படாமல்‌ போகும்‌.


Parimelalagar

நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல் கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும்.
விளக்கம்:
(பொருளின்மையைத் தலைப்படுதலாவது, 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும்' என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும்,
(என்றவாறு). ஏற்றுக்கொள்வாரில்லை யென் றவாறாயிற்று. இது கல்வி கெடும்; சுற்றத் தாரும் கைவிடுவ ரென்றது.