குறள் 1011

நாணுடைமை

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற

karumaththaal naanuthal naanundh thirunuthal
nallavar naanup pira


Shuddhananda Bharati

Sensitiveness to shame

To shrink from evil deed is shame
The rest is blush of fair-faced dame.


GU Pope

Shame

To shrink abashed from evil deed is 'generous shame';
Other is that of bright-browed one of virtuous fame.

True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.


Mu. Varadarajan

தகாத செயல்‌ காரணமாக நாணுவதே நாணமாகும்‌; பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள்‌ வேறு வகையானவை.


Parimelalagar

நாணுக் கருமத்தால் நாணுதல் - நன்மக்கள் நாணாவது இழந்த கருமங் காரணமாக நாணுதல்; பிற திரு நுதல் நல்லவர் நாணு - அஃதன்றி மனமொழிமெய்களது ஒடுக்கத்தான் வருவனவோ வெனின், அவை அவரளவல்ல; அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள்.
விளக்கம்:
('பிற குலமகளிர் நாண்' என்றதனான், ஏனையது 'நன்மக்கள் நாண்' என்பதும், 'நாணுதல்' என்றதனால் கருமத்தது இழிவும் பெற்றாம். 'திருநுதல் நல்லவர்' என்பது புகழ்ச்சிக்குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப் 'பிற' என்றார். இனி, 'அற்றம் மறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோடு ஒக்கும்', என்று உரைப்பாரும் உளர்; அவர்க்கு நாண் கேடு பயக்கும் என விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்பட்டமையானும், அஃது உரையன்மை அறிக. இதனான் நாணினது இலக்கணம் கூறப்பட்டது.)


Manakkudavar

நாணுடைமையாவது அறம் பொருள் இன்பங்களிற் பிறர் பழியாம லொழுகுதல். (இதன் பொருள்) தாம் செய்யும் வினையினாலே நாணுதல் நாணம் ; அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோ டொக்கும். மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு , இது கூறப்பட்டது.