Kural 10
குறள் 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
piravip paerungkadal neendhthuvar neendhthaar
iraivan atisaeraa thaar
Shuddhananda Bharati
The sea of births they alone swim
Who clench His feet and cleave to Him.
GU Pope
They swim the sea of births, the 'Monarch's' foot who gain;
None others reach the shore of being's mighty main.
None can swim the great sea of births but those who are united to the feet of God.
Mu. Varadarajan
இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்: மற்றவர் கடக்க முடியாது.
Parimelalagar
இறைவன் அடி (சேர்ந்தார்) பிரவிப் பெருங்கடல் நீந்துவர் - இரைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெருங்கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.
விளக்கம்:
(காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப்பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் எனப்து சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவைன் அடியையே நினைப்பார்க்கு பிறவி அறுதலும், அவ்வாறின்றி மாறி நினைப்பார்க்கு அஃது அறாமையும் ஆகிய இரன்டும் இதனான் நியமிக்கப்பட்டன.
Manakkudavar
(இதன் பொருள்) அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமும் முடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலை யினையுடைய உடம்புகள்,
(என்றவாறு). உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார். 10