குறள் 398

கல்வி

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து

orumaikkan thaankatrra kalvi oruvatrku
yelumaiyum yaemaap putaiththu


Shuddhananda Bharati

Education

The joy of learning in one birth
Exalts man upto his seventh.


GU Pope

Learning

The man who store of learning gains,
In one, through seven worlds, bliss attains.

The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.


Mu. Varadarajan

ஒரு பிறப்பில்‌ தான்‌ கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும்‌ அல்லாமல்‌ ஒருவனுக்கு எழுபிறப்பிலும்‌ உதவும்‌ தன்மையுடையதாகும்‌.


Parimelalagar

ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.
விளக்கம்:
(வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை மேலே கூறப்பட்டது (குறள் 62.) உதவுதல் - நன்னெறிக் கண் உய்த்தல்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழு பிறப் பினும் ஏமமாதலை யுடைத்து,
(என்றவாறு) கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.